Wednesday, July 13, 2005

ராம

"அக்ஷரத்துக்கு மகிமை உண்டு" என்று எடுத்துக்காட்டியவர் காஞ்சி மஹாபெரியவர்.

"உலக யுத்தத்தின் போது ஆங்கிலேயப் படைவீரர்கள் ஒரு அக்ஷரத்தின் விசேஷத்தால் வெற்றியடைந்தார்கள். ரஷ்யாவும் ஜெர்மனியும் இங்கிலாந்து நாட்டிற்கு மிகுந்த துன்பத்தை அளித்தபோது, அந்த நாட்டின் மந்திரி 'வி' என்ற எழுத்தை வீரர்களுக்கு ஜீவநாடியாகத் தந்தார். 'வி' என்பது விக்டரி (வெற்றி) என்பதன் முதல் எழுத்து. அந்த எழுத்து எல்லாப் பகுதிகளிலும் காட்சி தந்தது. அரசாங்க ஸ்தாபனங்களும் பெரிய அளவில் அந்த எழுத்தை எழுதி அனைவரையும் புத்துணர்வு பெறச் செய்தன. வெற்றி வெற்றி என்ற எண்ணம், அவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தது".

இவ்வாறு அக்ஷரத்தின் மஹிமையைப் பற்றிக் கூறி வந்த காஞ்சி மஹாபெரியவர் ராமநாமத்தின் மஹிமையை-வலிமையை விளக்கியருளினார்கள்.

" 'ராம' என்ற நாமம் ஸகல மங்களத்தையும் அளிக்க வல்லது. துன்பங்களைப் போக்க வல்லது. ராமராஜ்யத்தில் ஜனங்கள் எல்லோரும் எப்பொழுதும் 'ராம, ராம' என்று உச்சரித்துக் கொண்டே இருந்தார்கள்.

ஒவ்வொருவரும் தினந்தோறும் 108 முறையாவது ராம நாமாவைக் கூறவேண்டும். விஷ்ணு மந்திரத்திற்கும், சிவ மந்திரத்திற்கும் ஜீவாதாரமாக விளங்கும் அக்ஷரங்கள் ("நாராயணாய", "நச்சிவாய") இணைந்ததுதான் 'ராம' என்ற நாமம். அதற்குத் தனி மஹிமை உள்ளது" என்று காஞ்சி மஹாபெரியவர் தமது அருளுரையில் கூறி வந்தார்கள்.

-காஞ்சிப் பெரியவர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள், கங்கா ராமமூர்த்தி, கங்கை புத்தக நிலையம்

2 comments:

TJ said...

Good post!
You are doing a nice job. Keep it going!

(Mis)Chief Editor said...

அன்புள்ள டிஜே மற்றும் வாசு அவர்களுக்கு,

மிக்க நன்றி.

காஞ்சி மஹாபெரியவர் பற்றிய எதுவாயினும் நல்லதுதான். இதில் என் பங்கு கிஞ்சித்துமில்லை.

வாழ்க வளமுடன்,
பிகே

முந்தைய பதிவுகள்

Followers