Wednesday, July 27, 2005

இறை நம்பிக்கை

உனைப் பார்க்க முடிவதில்லை...
பார்த்தாலும் பேச முடிவதில்லை...
பேசினாலும் எண்ணங்களைப்
பரிமாறிக்கொள்ள முடிவதில்லை...
எண்ணங்களைப் பரிமாறிக் கொண்டாலும்
இதயத்தை இருத்த முடிவதில்லை...
இருந்தும்.........உன்னை நேசிக்கவே செய்கிறேன்...
ஏனெனில்..நான் சுவாசிக்க வேண்டும்!

Sunday, July 17, 2005

ஆமை ஓடு

கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றை நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார். தாய்மார்களுக்கு என்ன கொடுத்தார்? அழகு. ஆண்களுக்கு வீரம். நரிக்குத் தந்திரம், குதிரைக்கு வேகம், மாட்டுக்கு உழைப்பு, மயிலுக்குத் தோகை, சிம்மத்துக்கு ஆற்றல், யானைக்குத் தந்தம், சேவலுக்குக் கொண்டை. ஆமைக்கு வேகம் குறைவு. அதற்காகப் பகவான் ஓடு கொடுத்தார். தற்காப்பாக.

அந்த ஓடு இல்லையென்றால் ஆமை விரைவில் செத்துப் போகும். ஓடு இருப்பதினாலே ஆமையைக் கொல்ல முடியாது. ஓடு அவ்வளவு மொத்தமானது (thickness). ஐந்து பேர் ஒன்று சேர்ந்தார்கள். மாரன், தீரன், வீரன், சூரன், கோரன்; ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து, மூன்று கல் எடுத்து, அடுப்பு மாதிரி வைத்தார்கள். வெல்லம் காய்ச்சுகிற இரும்புக் கொப்பரை வைத்து, இருபது குடம் தீர்த்தத்தை வார்த்து, ஆமையை அந்தத் தண்ணீரிலே தூக்கிப்போட்டு, மேலே ஒரு பித்தளைத் தாம்பாளத்தை, அது துள்ளிக் குதித்து ஓடாவண்ணம் மூடி, நான்கு எடை சவுக்குக் கட்டையை வைத்து தீ வைத்தார்கள். ஆரம்பத்தில் தண்ணீர் குளிர்ச்சியாகத்தான் இருக்கும். இனிமேல்தான் கட்டை தீப்பிடித்துத் தளதள என்று தண்ணீர் கொதித்து, ஆமை செத்துப் போகும். இப்பொழுது தண்ணீர் ஜில் என்று இருப்பதால், ஆமை நீந்தி விளையாடும். ஆனால், இன்னும் அரைமணி கழித்துத்தானே தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும். அப்போது? இது கதை அல்ல.

வாதம், பித்தம், சிலேத்துமம் என்பனதான் அந்த அடுப்பு மாதிரியான மூன்று கற்கள். இந்தத் தேகம்தான் இரும்புக்கொப்பரை. ஆசைதான் அந்த நீர். அந்த ஐந்து பேர் தான் ஊறு, சுவை, ஒளி, ஓசை, நாற்றம் என்பன. ஆத்மா என்கிற ஆமையைப் போட்டுப் பந்த பாசம் என்னும் தாம்பாளம் இட்டு, தீவினை என்கிற அக்கினியை மூட்டிவிட்டு இருக்கிறார்கள். இந்த ஆமையாகிய நாமெல்லாம் 'அந்த ஓட்டலிலே பூரி, மசாலா நன்றாக இருக்கிறது. இந்த ஓட்டலிலே ரசம், வடை எல்லாம் நன்றாக இருக்கிறது' என்று நீந்தி விளையாடிக் கொண்டிருக்கிறோம். இது யார் சொன்னது? அப்பர் பெருமான் சொல்லுகிறார்.

வளைத்து நின்(று) ஐவர் கள்வர்
மனத்திடைத் துயரஞ் செய்து
தளைத்து வைத்(து) உலையில் ஏற்றி,
தழலெரி மடுத்த நீரில்
திளைத்து நின்(று) ஆடுகின்ற
ஆமைபோல் தெளிவி லாதேன்
இளைத்து நின்(று) ஆடுகின்றேன்;
என் செய்வேன் தோன்றி னேனே!

-அப்பர் தேவாரம்

ஏன் இந்த ஆமை துன்பப்பட்டது? துன்பத்தை இன்பமாய் எண்ணியது, அஞ்ஞானம். ஞானம் இருந்தால், என்ன வந்தாலும் மகிழ்ச்சியாகவே இருக்கும்.

- வாரியார் வாக்கு, வானதி பதிப்பகம்

Friday, July 15, 2005

பாலசந்திரன் யார்?

ஸமீபத்தில் ·பாஷன் பெயர்கள் வர ஆரம்பிப்பதற்கு முன் சந்திரன் என்று தனிப் பெயர் வைக்கும் வழக்கம் தக்ஷ¢ண தேசத்தில் இல்லை...மொத்தத்தில் சந்திரன் மட்டுமல்லாமல், நவக்கிரஹங்களில் ஸ¤ர்யன் தவிர எவர் பெயரும் வைப்பது தென்னாட்டில் ஸம்ப்ரதாயமில்லை.

"தேய்வைக் காட்டும் பாலசந்திரன் பேரோ, பூர்ணசந்திரன் என்றோ கூடப் பேர் வைக்கும் வழக்கமில்லை...

...தற்போது நிறையவே அந்தப் பேர் வைப்பதாக இருக்கிறதே என்றால், இது வாஸ்தவத்தில் சந்திரன் பெயரே இல்லை.

..வேடிக்கையாக இருக்கலாம். பாலசந்திரன் என்பது சந்திரன் பேருமில்லை. அது இப்போது உச்சரிக்கிற மாதிரி, ஸ்பெல்லிங் போடுகிற மாதிரி, BAALACHANDRAN-ம் இல்லை.
..PHAALA CHANDRAN அதாவது PAA-வையே அழுத்தி ஸம்ஸ்கிருதத்தில் இரண்டாவது PHAAவாக முதல் எழுத்தைச் சொல்ல வேண்டும். அதுதான் ஸரியான பேர். PHAALA என்றான் கேசத்தின் முன்பக்கம். PHAALA CHANDRAN என்றால் "கேசத்தின் முன் பக்கத்தில் சந்திரனை உடையவன்" சந்திரசேகரன், சந்திரமௌளி என்ற பேர்களுக்கு என்ன அர்த்தமோ அதுதான் 'PHAALA சந்திரன்' என்பதற்கும்....

-காஞ்சி மஹாபெரியவர்

சங்கரன் கோவில்

சங்கரன் கோயிலின் பெரும்புகழும் கோயிலின் வடபால் உள்ள கோமதித் தாயிடம்தான் அடங்கி இருக்கிறது. ஒரு கரத்தில் மலர்ச் செண்டு ஏந்தி, மறு கரத்தால் தன் திருவடிகளைக் காட்டும் பேரழகி கோமதி. கல்லாய் நின்றாலும் கல் மனத்தைக் கரைக்கும் அழகி அவள். 'ஆத்தா' என்று அடிவயிற்றிலிருந்து குரல் எழுப்பும் பாமரர் பக்திக்குப் பாய்ந்து வந்து உதவும் பராபரை அவள். உடற்பிணி உற்றோர் 'பிணியே பிணிக்கு மருந்தே' என்றபடி இவளை வேண்ட நோய் நீங்கி நலம் பெறுவது நாளும் நடக்கும் அதிசயம்.

இந்தக் கோமதியம்மையிடம் சண்டைக்குப் போனார் ஒரு தமிழ்ப்புலவர். ஒரு பிள்ளை என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டியவள் தாய்தானே? எலி பிடிப்பது எப்படி என்று குட்டிப் பூனைக்குத் தாய்ப் பூனைதானே கற்றுக்கொடுக்கிறது. பால் குடிக்கத் தெரியாத பச்சைக் குழந்தையைத் தாய் பட்டினி போடுவாளா? மார்பருகே அணைத்து எப்படி அருந்துவது என்று அறியாத சிசுவுக்கு எடுத்து ஊட்டும் கருணை தாயின் கடமை அல்லவா?

அது மாதிரி பக்தி பண்ணத் தெரியாது திரிந்து எமனிடம் சிக்க இருக்கும் ஜீவனைப் பால் குடிக்கப் பழக்கும் தாய் மாதிரி, திருவடி நிழலுக்குப் பழகும் பக்தனாக்குவது உன் கடமை அல்லவா? என்று சண்டைக்குப் போகிறார் அழகிய சொக்கநாதப் பிள்ளை. பருந்து பறந்து வந்து குஞ்சுகளைக் கொத்த வந்தால் -- பலகீனமான தாய்க்கோழி கூடத் துரத்துமே! குஞ்சுகளை இறகுகளில் ஒடுக்குமே! எமனிடமிருந்து மீட்டு இறகுகளில் அடைக்கும் கோழிக்கு உள்ள கருணை கோமதிக்கு வேண்டாமா?

" 'போடா' என்று எமனை விரட்டு! என்ன செய்வது என்று அறியாத இந்த மூடனை 'வாடா' என்று அழைத்துத் திருவடியில் அழுத்து. இப்படி செய்தால் யார் தடுப்பார் அன்னையே! கோமதி ஈஸ்வரியே!" என்று பாடினார். 'போ' என்று எமனை விரட்டு என்று சொல்லாமல், 'போடா' என்பதில் எமனிடம் வெறுப்பும் அம்பிகையின் அதிகார உரிமையும் வெளிப்பட்டது. பக்தனை 'வாடா' என்று அழைக்க வேண்டும் என்ற வரியில் பரிவு பாசம் இத்துடன் தன் மீது அவளுக்குள்ள உரிமையும் வெளிப்பட்டது.

'வா' என்பதை விட 'வாடா' என்பதில் நெருக்கமும் பாசமும் புலப்படும். உரிமை வெளியாகும். எந்த உரிமையும் கடமையுடன் கூடியது என்ற தர்க்க நியதிப்படி அம்பாளின் கடமையையும் நினைவூட்டும் பாடல் அழகிய சொக்கநாதரின் அழகிய பாடல்.

'கேடாவரும் நமனைக் கிட்டவராதே தூரப்
போடா என்றோட்டி உந்தன் பொற்கமலத் தாள்நிழற்கீழ்
வாடா என அழைத்து வாழ்வித்தால் அம்மா! உனைக்
கூடாதென்றார் தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே.'

- நன்றி: ஒரு தலம், ஒரு பாடல், ஒரு நயம், திரு சுகி சிவம், வானதி பதிப்பகம்.

Wednesday, July 13, 2005

ராம

"அக்ஷரத்துக்கு மகிமை உண்டு" என்று எடுத்துக்காட்டியவர் காஞ்சி மஹாபெரியவர்.

"உலக யுத்தத்தின் போது ஆங்கிலேயப் படைவீரர்கள் ஒரு அக்ஷரத்தின் விசேஷத்தால் வெற்றியடைந்தார்கள். ரஷ்யாவும் ஜெர்மனியும் இங்கிலாந்து நாட்டிற்கு மிகுந்த துன்பத்தை அளித்தபோது, அந்த நாட்டின் மந்திரி 'வி' என்ற எழுத்தை வீரர்களுக்கு ஜீவநாடியாகத் தந்தார். 'வி' என்பது விக்டரி (வெற்றி) என்பதன் முதல் எழுத்து. அந்த எழுத்து எல்லாப் பகுதிகளிலும் காட்சி தந்தது. அரசாங்க ஸ்தாபனங்களும் பெரிய அளவில் அந்த எழுத்தை எழுதி அனைவரையும் புத்துணர்வு பெறச் செய்தன. வெற்றி வெற்றி என்ற எண்ணம், அவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தது".

இவ்வாறு அக்ஷரத்தின் மஹிமையைப் பற்றிக் கூறி வந்த காஞ்சி மஹாபெரியவர் ராமநாமத்தின் மஹிமையை-வலிமையை விளக்கியருளினார்கள்.

" 'ராம' என்ற நாமம் ஸகல மங்களத்தையும் அளிக்க வல்லது. துன்பங்களைப் போக்க வல்லது. ராமராஜ்யத்தில் ஜனங்கள் எல்லோரும் எப்பொழுதும் 'ராம, ராம' என்று உச்சரித்துக் கொண்டே இருந்தார்கள்.

ஒவ்வொருவரும் தினந்தோறும் 108 முறையாவது ராம நாமாவைக் கூறவேண்டும். விஷ்ணு மந்திரத்திற்கும், சிவ மந்திரத்திற்கும் ஜீவாதாரமாக விளங்கும் அக்ஷரங்கள் ("நாராயணாய", "நச்சிவாய") இணைந்ததுதான் 'ராம' என்ற நாமம். அதற்குத் தனி மஹிமை உள்ளது" என்று காஞ்சி மஹாபெரியவர் தமது அருளுரையில் கூறி வந்தார்கள்.

-காஞ்சிப் பெரியவர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள், கங்கா ராமமூர்த்தி, கங்கை புத்தக நிலையம்

Tuesday, July 12, 2005

இனிப்பு அப்பம்

தாய்: "சமையலறையிலிருந்து நீ அந்த இனிப்பு அப்பத்தைத் திருடும்போது கடவுள் அங்கு இருந்தார் என்பது உனக்குத் தெரியுமா?"
குழந்தை: "தெரியும்"
"அவர், எல்லா நேரத்திலும் உன்னையே பார்த்துக்கொண்டிருந்தாரா?"
"ஆமாம்"
"அவர் உன்னிடம் என்ன சொன்னார்?"
"அவர் இவ்வாறு சொன்னார்: இங்கு நம் இருவரைத் தவிர யாருமில்லை - இரண்டு அப்பங்களை எடுத்துக்கொள்."

-அந்தோணி டி மெல்லோ அவர்கள் எழுதிய தவளையின் பிரார்த்தனை - பாகம் இரண்டு - கண்ணதாசன் பதிப்பகம்

Monday, July 11, 2005

உம்மாச்சி

குழந்தைகள் நமக்குக் கட்டளை இடுவது என்ன? குழந்தைகள் ஸ்வாமியை 'உம்மாச்சி' என்றே சொல்லும். குழந்தைகளின் பரம்பரையில் சில தனி வார்த்தைகள் உண்டு. இவை ஆயிரக்கணக்கான வருஷங்களாக வந்து கொண்டிருக்கின்றன. பெரியவர்களின் வார்த்தைகளும், அவற்றின் அர்த்தங்களும் மாறும். குழந்தைமொழி மாறுவதில்லை. 'உம்மாச்சி' என்ற குழந்தைமொழிக்கு 'ஸ்வாமி' என்று அர்த்தம். என்னிடம் குழந்தைகளை அழைத்து வருகிறவர்கள் கூட 'உம்மாச்சித் தாத்தாவுக்கு நமஸ்காரம் செய்' என்று அவற்றிடம் சொல்லக் கேட்டிருப்பீர்கள். 'இதென்ன உம்மாச்சி? இதன் சரியான மூலம் என்ன?' என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

திருச்சி மலைக்கோட்டைக்குப் போயிருந்தேன். அங்கே உள்ள ஸ்ரீ பாதந்தாங்கிகளில் திருநல்லத்திலிருந்து (கோனேரி ராஜபுரம்) வந்திருக்கிறவர்களும் இருந்தார்கள். அவர்களில் ஒருவரை இன்னொருவர் 'உம்மாச்சு' என்று கூப்பிடுவதைக் கேட்டேன். திருநல்லத்தில், ஸ்வாமியின் பெயர் உமாமகேசுவரன் என்பது. எனக்கு உடனே விஷயம் பளிச்சென்று புரிந்தது. உம்மாச்சு, உம்மாச்சி எல்லாம் உமா மகேசனைக் குறிப்பனவே என்று தெரிந்து கொண்டேன். ஆக, குழந்தைகளின் பாஷையிலிருந்தே அவர்கள் மிகப் பழங்காலத்திலிருந்து உமாதேவியுடன் சேர்ந்த மகேசுவரனைத்தான் ஸ்வாமியாக நினைக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.

நம: பார்வதீ பதயே: ஹர ஹர மஹாதேவா!

-காஞ்சி மஹா பெரியவர்

Saturday, July 09, 2005

விக்னேசுவரர்




கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமமும் ஆதலால்
கணபதி என்றிடக் கவலைகள் தீருமே.

முந்தைய பதிவுகள்

Followers