சுந்தர காண்டம் முதல் ஸர்க்கம் - அனுமன் கடலைத் தாண்டியது.
சுந்தர காண்டம் 2வது ஸர்க்கம் துவங்கி 11வது ஸர்க்கம் வரை - அனுமன்
இலங்காபுரியில் சீதாப் பிராட்டியைத் தேடியது. வான்மீகி முனிவரும்,
கம்பநாடனின் வர்ணனையில் இலங்காபுரி நம் கண்களில் நின்றாலும்...இதன்
பின்னால் இரு சேதிகள் இருக்கின்றன.
சுந்தர காண்டம் 14 வது ஸர்க்கம் - அசோகவனம்.
சீதாப்பிராட்டியின் சோகம் ஒன்று என்பதைப் பார்த்து விட்டோம்.
இரண்டாவது, அனுமனின் கூர்ந்த அறிவுத் திறன். வான்மீகி முனிவரும்,
கம்பநாடனும் அனுமனின் கண்கள், வாய்மொழி, நடத்தை மூலம் நம்மை இலங்காபுரியை
அனுபவிக்கச் செய்கிறார்கள்.
சாதாரணத் தூதுவன் என்பதிற்கு மேலாக அனுமன் பல அநாயாச காரியங்களைச் சுந்தர காண்டத்தில் செய்கிறான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
'நாளை இராவணேசுவரன் எங்கு வேண்டுமானாலும் சீதாப்பிராட்டியை ஒளித்து
வைக்கலாம்' என்கிற எண்ணம் அனுமனுக்குள் உழன்று கொண்டேயிருக்கிறது.
அதனால்தான் இண்டு இடுக்கு விடாது இலங்காபுரியில் தேடுவதாகவும், அழகை
வியப்பதாகவும் அமைக்கப்பட்டு இருக்கிறது சுந்தர காண்டம். Observation எனும்
ஆங்கிலச் சொல்லை இங்கு பொருத்திப் பார்த்தால் உண்மை விளங்கும்.
12-13 ஸர்க்கங்கள் அனுமனின் துயர் நிலையைச் சொல்கின்றன. அதுவும் அனுமனின்
வாயிலாகவே. ஆக, எல்லாவற்றையும் அனுமன் மூலமாகத் தெரிந்து கொள்கிறோம்.
அவனுடைய ஆற்றல், அறிவு, மதிநுட்பம், மண்டோதரியைக் கண்டவுடன் மகிழ்தல்,
பின் சீதாப்பிராட்டியைக் காணாது கலங்குதல் என அனுமனுடன் நாம் பயணித்து,
அதிசயித்து, தொழுது அவன் தாள்கள் போற்றுகிறோம்.
No comments:
Post a Comment