சீதாப்பிராட்டி நிலை எப்படி இருக்கிறது?
மெலிந்திருப்பதால், இன்னார் என்று ஊகித்து அறியக்கூடிய உருவம்.
புகைக்கூட்டத்தால் மறைக்கப்பட்ட அக்னிக் கனல். அழுக்கடைந்த பட்டாடையை
உடுத்தியவள்.
அழுக்குப் படிந்தவள்;
அலங்காரம் இல்லாதவள்; தாமரை மலர்கள் இல்லாத குளத்தைப் போன்றவள். இலக்குவனை
அவமதித்துப் பேசியதால் உண்டான வெட்கம் உடையவள். சோகத்தால் தவித்துக்
கொண்டிருப்பவள்; வாடிப் போயிருப்பவள்.
விரதங்களையும், அன்றாட
அனுஷ்டானங்களையும் மேற்கொண்டிருப்பவள்; அங்காரகனால் (செவ்வாய்க் கிரகம்)
ஆட்கொண்டிருக்கும் ரோஹிணி நட்சத்திரத்தைப் போன்றவள். கண்ணீர் வழியும்
முகம்; நலிவை அடைந்தவள்; உணவு உட்கொள்ளாததால் இளைத்தவள்.
இராமபிரானையே என்றும் துதிப்பதால், அவரைப் பிரிந்ததால் உண்டான சோகத்தில்
இருப்பவள். எளியவள்; எப்போதும் துக்கத்தில் அனுபவித்துக் கொண்டிருப்பவள்.
தன்னிடம் அன்பு கொண்ட மக்களைக் காணாதவள்; இராக்ஷஸிகளின் கூட்டத்தையே
பார்த்துக்கொண்டு இருப்பவள்; தன் கூட்டத்தை விட்டு விலகிப் போய்,
நாய்களின் கூட்டத்தில் சேர்ந்த பெண்மானைப் போன்றவள்.
பின்பாகம்
தொடும் அளவுக்கு நீண்ட கருநாகம் போன்ற ஒற்றைப் பின்னலை உடையவள்;
மழைக்காலங்களில் கரும்பச்சையான மரங்கள் கொண்ட பூமி போன்ற கருங்கூந்தலால்
அழகாக விளங்குபவள்.
சுகத்தை அனுபவிக்க தக்கவள்; சோகத்தில் மூழ்கியிருப்பவள்.
கம்பநாடன் விவரிப்பும் இப்படித்தான் சொல்கிறது.
No comments:
Post a Comment