குழந்தைகள் நமக்குக் கட்டளை இடுவது என்ன? குழந்தைகள் ஸ்வாமியை 'உம்மாச்சி' என்றே சொல்லும். குழந்தைகளின் பரம்பரையில் சில தனி வார்த்தைகள் உண்டு. இவை ஆயிரக்கணக்கான வருஷங்களாக வந்து கொண்டிருக்கின்றன. பெரியவர்களின் வார்த்தைகளும், அவற்றின் அர்த்தங்களும் மாறும். குழந்தைமொழி மாறுவதில்லை. 'உம்மாச்சி' என்ற குழந்தைமொழிக்கு 'ஸ்வாமி' என்று அர்த்தம். என்னிடம் குழந்தைகளை அழைத்து வருகிறவர்கள் கூட 'உம்மாச்சித் தாத்தாவுக்கு நமஸ்காரம் செய்' என்று அவற்றிடம் சொல்லக் கேட்டிருப்பீர்கள். 'இதென்ன உம்மாச்சி? இதன் சரியான மூலம் என்ன?' என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
திருச்சி மலைக்கோட்டைக்குப் போயிருந்தேன். அங்கே உள்ள ஸ்ரீ பாதந்தாங்கிகளில் திருநல்லத்திலிருந்து (கோனேரி ராஜபுரம்) வந்திருக்கிறவர்களும் இருந்தார்கள். அவர்களில் ஒருவரை இன்னொருவர் 'உம்மாச்சு' என்று கூப்பிடுவதைக் கேட்டேன். திருநல்லத்தில், ஸ்வாமியின் பெயர் உமாமகேசுவரன் என்பது. எனக்கு உடனே விஷயம் பளிச்சென்று புரிந்தது. உம்மாச்சு, உம்மாச்சி எல்லாம் உமா மகேசனைக் குறிப்பனவே என்று தெரிந்து கொண்டேன். ஆக, குழந்தைகளின் பாஷையிலிருந்தே அவர்கள் மிகப் பழங்காலத்திலிருந்து உமாதேவியுடன் சேர்ந்த மகேசுவரனைத்தான் ஸ்வாமியாக நினைக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.
நம: பார்வதீ பதயே: ஹர ஹர மஹாதேவா!
-காஞ்சி மஹா பெரியவர்

6 comments:
எனது இல்லத்துக்கு வருகை தந்து
தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டதற்கு மிக்க நன்றி.
என் குழந்தைகளுக்கு கூட 'உம்மாச்சி' என்று
தான் இத்தனை நாள் அர்த்தம் புரியாமல் சொல்லிக் கொடுத்தேன்.
விளக்கத்திற்கு மிக்க நன்றி
அன்புள்ள வெங்கிட்டு அவர்களுக்கு,
உடனடி பதிலுக்கு மிக்க நன்றி.
தங்களைப் போன்றவர்களின் ஆதரவுடன் வெற்றி நடை பழகுவேன் என்று நம்பிக்கையிருக்கிறது.
வாழ்க வளமுடன்,
பிகே
அன்புள்ள வாசு அவர்களுக்கு,
தங்களுடைய பதிவுக்கு நன்றி.
நிச்சயம் வாசிக்கிறேன்; முடிந்தால் இதில் பதிவும் செய்கிறேன்.
அடிக்கடி வாருங்கள்.
வாழ்க வளமுடன்,
பிகே
Palli Kondane!
Ini Vaishnavargal thangal pillaikku 'ummachi' enru sollitharamaattargalo, ennavo! (as i recall many Vaishnavites do not visit Siva temples)
neer eppadi!
அன்புள்ள
கே ராம் அவர்களே - வருகைக்கு நன்றி; உண்மைதான் வைஷ்ணவர்கள் இதை ஒத்துக்கொள்வார்களா:-)
வாசு அவர்களே, மிக்க நன்றி ! நிச்சயம் எனக்கு இது உதவும்.
வாழ்க வளமுடன்,
பிகே
உம்மாச்சி அர்த்தம் நன்னா இருக்கு!!...:)
Thakkudu
www.ummachikappathu.blogspot.com
Post a Comment