அடியேன்
அறிந்தும் அறியாமலும்
தெரிந்தும் தெரியாமலும் செய்த
சகல பிழைகளையும் பொறுத்துக்
காத்து ரட்சிக்க வேணும் பகவானே...
அய்யப்பா!

என்று தினமும் (என்னால் முடிந்த) பிரார்த்தனை-யில் சேர்த்துக்கொள்வேன். பொத்தாம் பொதுவாய்ச் சொல்லாமல், மனத்தால் தினமும் சொல்லிக் கொள்ளும் மந்திரம் இது.
அவன்தானே நம் பிழை பொறுக்க வேணும்? மன்னிக்கும் மனம் அவனிடம்தானே இருக்கிறது? மன்னித்த பின், மறக்கும் குணமும் அவனிடம்தானே உள்ளது?
மன்னிப்பது நல்ல குணம். அதனால் எல்லா மனிதர்களிடம் மன்னிக்கும் குணத்தை எதிர்பார்க்க முடியாது.
மன்னித்த பின் மறப்பது பெருங்குணம். இது பெரும்பாலும் எளிய / மெத்த படிக்காத மனிதர்களிடம் மட்டுமே காணப்படுவது ஆச்சர்யம்தான்.
0 comments:
Post a Comment