Sunday, October 09, 2011

தத்தாத்ரேயரின் ஆசிரியர்கள் - 4


9) மலைப்பாம்பினடமிருந்து, சிறியதோ, பெரியதோ, இனியதோ, கைப்பதோ - கிடைத்ததை எல்லாம் மகிழ்ச்சியோடு அனுபவிக்கும் குணத்தைப் பயின்று கொண்டேன்.
ग्रासं सुमृष्टं विरसं महान्तं स्तोकमेव वा |
यद्रुच्छयैवापतितं ग्रसेदाजगरोक्रिय:॥

க்ராஸம் ஸும்ருஷ்டம் விரஸம் மஹாந்தம் ஸ்தோகமேவ வா|
யத்ருச்சயைவாபதிதம் க்ரஸேதாஜகரோSக்ரிய: ||

(பாகவதம், 11, 8, 2)


10) காற்றும் மழையும் வந்து பொங்கினாலும், வெய்யில் காய்ந்தாலும், எப்போதும் ஒன்றுபோல் திருப்தியுடனும் கம்பீரமாகவும் இருக்க வேண்டுமென்பதைக் கடலிலிருந்து தெரிந்துகொண்டேன்.

11) உருவைக் கண்டு மயங்கி, தீயில் வீழ்ந்து மடியாதிருக்க, விட்டில் பூச்சியினடமிருந்து கற்றுக் கொண்டேன்.


12) பூக்களிலுள்ள தேனை மட்டும் எடுத்துக்கொண்டு செல்வது போல், சாரத்தை மட்டும் ஏற்று மற்றவைகளை ஒதுக்க தேனீயிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

13) மரத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் பெண்ணையும் தொடாமல் விலகுவதை யானையிடமிருந்து கற்றுக் கொண்டேன்.


14) எந்தப் பொருளையும் சேர்த்து வைக்கக் கூடாது, வைத்தால் அது நமக்குப் பயன்படாது, கொள்ளை போய்விடும் என்பதைத் 'தேன் அடையைக் கலைத்து தேனைச் சேகரித்துச் செல்பவனிடமி'ருந்து தெரிந்து கொண்டேன்.

न देयं नोपभोग्यं च लुब्धैर्यद दु:खसन्चितम् |
भुङ्क्ते तदपि तच्चान्यो मधुहेवार्थविन्मधु:

தேயம் நோபபோக்யம் லுப்தைர்யத் து:கஸஞ்சிதம்|
புங்க்தே ததபி தச்சான்யோ மதுஹேவார்த்தவின்மது: ||

(பாகவதம், 11, 8, 15)

15) இசையைக் கேட்டு மயங்கி ஆடிக் குதித்தால் ஆபத்தில் சிக்க நேரும் என்பதை மானிடமிருந்து தெரிந்து கொண்டேன்.


16) நாவை அதிகம் வளர்த்துக்கொண்டால் அது நம் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்பதை மீனடிமிருந்து தெரிந்து கொண்டேன். மீன் என்ன செய்கிறது? தூண்டில் முள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அதில் செருகப்பட்டுள்ள சிறு புழுவைத் தின்னும் ஆசையினால் அதைப் போய் கவ்வுகிறது. அதனால் தன உயிரையும் இழக்க நேரிடுகிறது. நாவு நீண்ட பெரு வயிறு படைத்தவர்களின் கதியும் இப்படித்தான் ஆகிறது.

जिह्वयातिप्रमाथिन्या जनो रसविमोहित: |
मृत्युमृच्छत्यसदबुद्धिर्मीनस्तु बडि शैर्यथा ॥

ஜிஹ்வயாதிப்ரமாதின்யா ஜனோ ரஸவிமோஹித: |
ம்ருத்யும்ருச்சத்யஸத்புத்திர்மீனஸ்து படிசைர்யதா ||

(பாகவதம், 11, 8, 19)

நாவை அடக்குதல் மிக அவசியமாகும். ஒருவன் நாவை அடக்கி விட்டானென்றால் எல்லா இந்திரியங்களையும் அடக்கி விட்டான் என்று சொல்லலாம்.

तावत् जितेन्द्रियो न स्यात्
विजितान्येन्द्रिय: पुमान् |
न जयेद् रसनं यावत्
जितं सर्वं जिते रसे ॥

தாவத் ஜிதேந்த்ரியோ ஸ்யாத்
விஜிதான்யேந்த்ரிய : புமான் ||
ஜயேத் ரஸனம் யாவத்
ஜிதம் ஸர்வம் ஜிதே ரஸே ||

(பாகவதம், 11, 8, 21 )

-தொடரும்

1 comment:

Balu said...

மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

இங்கே சொடுக்கவும்

ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

முந்தைய பதிவுகள்

Followers