Thursday, October 06, 2011

தத்தாத்ரேயரின் ஆசிரியர்கள் - 1


ஒரு சமயம் யது என்ற அரசன், 'பிறந்த மேனி'யாய்ச் சுற்றிக்கொண்டிருந்த ஒரு துறவியிடம்,

जनेषु दह्यमानेषु कामलोभदवग्निना I
न तप्य्सेग्निना मुक्तो गङ्गाम्भ:स्थ इव द्विप:||

ஜனேஷு தஹ்யமானேஷு
காமலோபதவாக்னினா I
ந தப்யஸேSக்னினா முக்தோ
கங்க அம்ப:ஸ்த இவ த்விப: ||

(பாகவதம் 11, 7, 29)

'உலகிலுள்ள எல்லோருமே காமம், லோபம், என்கிற தீயில் எரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் உங்களைப் பார்த்தால் அவைகளால் நீங்கள் தீண்டப்படாமல்....காடு முழுதும் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கையில், கங்கையின் மடுவில் மூழ்கி விளையாடும் யானையைப் போல தோன்றுகிறீர்களே? இது இப்படிச் சாத்தியம்?' என்று கேட்டான்.

தத்தாத்திரேயர் என்கிற அந்த அவதூதர் கூறியதாவது...

'நான் எத்தனையோ ஆசிரியர்களை நாடிப் பாடம் கற்றிருப்பதனால் என்னால் இவ்வாறு சுற்றிக் கொண்டிருக்க முடிகிறது...என் ஆசிரியர்கள் பெயர்களைச் சொல்கிறேன் கேள்...

पृथिवी वायुराकशमापोग्नि: चन्द्रमा रवि: I
कपोतोजगर: सिन्धु:पतङ्गो मधूक्रुद् गज: ॥
मधुहा हरिणो मीन: पिङ्गला कुरुरोर्भक: I
कुमारी शरकृत सर्प उर्णनाभि: सुपेशकृत॥

ப்ருதிவி வாயுராகசமாபோக்னி: சந்த்ரமா ரவி: |
கபோதோSஜகர: ஸிந்து : பதங்கோ மதுக்ருத் கஜ:!!
மதுஹா ஹரிணோ மீன: பிங்கலா குரரோSர்பக : |
குமாரீ சரக்ருத் சர்ப்ப ஊர்னநாபி: சுபேசக்ருத் ||

(பாகவதம் 11, 7, 33-34)

பூமி, காற்று, ஆகாயம், நீர், தீ, சந்திரன், சூரியன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில் பூச்சி, தேனீ, யானை, தேன் சேர்க்கும் வேடன், மான், மீன், பிங்கலை எனும் வேசி, குர்ரப் பறவை, குழந்தை, குமரிப் பெண், அம்பு தயாரிப்பவன், பாம்பு, வண்டு, கூட்டில் உள்ள புழு.

-தொடரும்

No comments:

முந்தைய பதிவுகள்

Followers