Saturday, January 01, 2011

ஸ்ரீ அனுமன் ஜயந்தி

ஸ்ரீ அனுமன் ஜயந்தி(04-01-2011)யன்று பஞ்சமுக ஆஞ்சநேயரை தரிசித்து வழிபடுவதால் எல்லா நலன்களும் கைகூடும்.

ஸ்ரீ அனுமன் முகம்: கிழக்கு நோக்கியது. பாவங்களைப் போக்கி, தூய சிந்தனையைத் தரும் அனுமன் திருமுகத்துக்கு வாழைப்பழமும், கடலையும் சமர்ப்பித்து, வழிபடவேண்டும்.

ஸ்ரீ நரசிம்ம முகம்: தெற்கு நோக்கியது. சத்ரு பயம் நீக்கி, வெற்றியைத் தரும் ஸ்ரீ நரசிம்ம முகத்துக்குப் பானகமும், நீர் மோரும் நைவேத்தியம் செய்வது நலம்.

ஸ்ரீ கருட முகம்: மேற்கு நோக்கியது. தீவினைகளையும், உடலில் உள்ள விஷத்தன்மையையும் அகற்றும் கருட முகத்துக்குத் தேன் சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பு.

ஸ்ரீ வராக முகம்:: வடக்கு நோக்கியது. கிரக தோஷங்களை நீக்கி, ஐசுவரியம் அருளும் ஸ்ரீ வராக திருமுகத்துக்குச் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.

ஸ்ரீ ஹயக்ரீவ முகம்: வாக்கு வன்மை, ஞானம், வெற்றி, நல்ல சந்ததி, முக்தி ஆகியவற்றை அருளும் மேல்நோக்கிய ஸ்ரீ ஹயக்ரீவ முகத்துக்கு அவல், சர்க்கரை, வெண்ணையை நிவேதனம் செய்து வழிபட வேண்டும்.

-சக்தி விகடன்

No comments:

முந்தைய பதிவுகள்

Followers