Saturday, January 01, 2011

தண்ணீர் விளக்கு!


ஸாயிபாபாவுக்கு விளக்குகள் என்றால் அதிக விருப்பம். அவர் கடைக்காரர்களிடமிருந்து எண்ணெய் வாங்கி மசூதியிலும், கோயிலிலும் இரவு முழுவதும் விளக்குகளை எரிய விடுவது வழக்கம்.

ஒரு சமயம், எண்ணெயை இலவசமாக அளித்து வந்த வணிகர்கள் எல்லோரும் ஒன்றுகூடி, இனிமேல் எண்ணெய் கொடுப்பதில்லை என முடிவு செய்தனர். வழக்கம்போல பாபா அவர்களிடம் எண்ணெய் கேட்கப்போனபோது அவர்கள் எல்லோரும் தீர்மானமாக எண்ணெய் இல்லையெனச் சொல்லிவிட்டார்கள்.

இதைக் கேட்டுக் குழப்பமடையாத பாபா, மசூதிக்குத் திரும்பி வந்து காய்ந்த திரிகளை விளக்குகளில் இட்டார். பாபா, மிகக் கொஞ்சம் (சில துளிகள்) மட்டுமே எண்ணெய் இருந்த தகரக் குவளையை எடுத்தார். தண்ணீரை அதில் ஊற்றிக் குடித்தார். இவ்விதமாக நிவேதனம் செய்த பிறகு, தகர டப்பாவில் தண்ணீரை மறுபடியும் எடுத்து எல்லா விளக்குகளிலும் அதனையே நிரப்பிக் கொளுத்தினார். ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வணிகர்களுக்கு ஆச்சர்யத்தையும், பயத்தையும் விளைவிக்கும்படியாக விளக்குகள் எரியத் துவங்கின!

தங்கள் செய்கைக்கு மனம் வருந்தி, பாபாவிடம் மன்னிப்புக் கேட்ட வணிகர்களை மன்னித்து, 'எதிர்காலத்தில் அதிக உண்மையுள்ளவர்களாக' இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

-அத்தியாயம் 5, ஸ்ரீ ஸாயி ஸத் சரித்திரம், பக்கம் 40

No comments:

முந்தைய பதிவுகள்

Followers