Sunday, October 17, 2010

கட உபநிடதம் - 1

ஓர் உண்மையை அறிய வேண்டும் என்றால் அதைப் பற்றியே நாம் எப்போதும் தீவிரமாகச் சிந்திக்கவேண்டும். மீண்டும் மீண்டும் அதே யோசனையில் லயித்து, அதைப் பற்றி மட்டும்தான் நாம் தியானிக்க வேண்டும் என்கின்றன உபநிடதங்கள்.

தேடுதல் என்பது உயிர் வேட்கையாக இருந்தால், உண்மைகள் எளிதாக நம்மை வந்தடையும்.

மரணத்தைப் பற்றி அறியத்துடித்த நசிகேதனின் ஆர்வம் அத்தகையதுதான். மனத்தின் மாயத்திரைகள் கிழிந்து, அதன் எல்லா முடிச்சுகளும் அவிழும்போது மனிதன் மரணமற்றவன் ஆகிறான். மனம் தூய்மை பெறுவதுதான் ஆன்மீக வாழ்வின் அடிப்படை! ஆசை, கோபம், தாழ்வு மனப்பான்மை, உணர்ச்சிச் சிக்கல்கள், மனப் போராட்டங்கள் எல்லாம் அகன்று மனம் தூய்மையாக தன்னலமற்று இருக்க வேண்டும். மனப் பக்குவம் பெற்றுவிட்டால் மரணத்தையே தூசியாக நினைத்து, ஊதித் தள்ளிவிடலாம். கட உபநிடதம் கூறும் உபதேசமும் இதுதான், இவ்வளவுதான்!

கட உபநிடதம், வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை நமக்குக் கூறுகிறது. இறைவனை, ஆன்மாவை உணர்வதற்கான அடிப்படைத் தேவைகள் அவை:

1. சிரத்தை
2. சுய ஆராய்ச்சி, சுய மதிப்பு
3. உண்மையை ஏற்றுக்கொள்ளுதல்
4. துணிவு
5. பற்றின்மை (ஆசையை விடுத்தல் அல்ல)
6. குருவின் தேவை
7. மன உறுதி
8. நல்லொழுக்கம்
9. புலன்களின் மீது பற்று வைக்காமல் இருப்பது
10. தியானம்
11. அமைதி
12. மௌனம்
13. தவம், வழிபாடு
14. 'மாயை'யை அறிந்து அதிலிருந்து வெளிப்படுதல்
15. 'வாழ்க்கையே நான்' என்பதை இயல்பாக உணர்ந்து கொள்வது

நாம் நாமாக இருப்போம். நமக்கேயான வாழ்க்கையை வாழ்ந்து தீர்ப்போம் - மிகவும் இயல்பாக, அழகாக, அர்த்தமுள்ளதாக!

-கடோபநிஷத், ஸ்ரீ உமாசக்தி, வரம் பதிப்பகம்

No comments:

முந்தைய பதிவுகள்

Followers