Thursday, July 01, 2010

காத்திருந்த தெய்வம்!


சென்னை ஸம்ஸ்க்ருத கல்லூரியில் ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவர் அவர்கள் முகாமிட்டிருந்த காலத்தில் திருச்சியிலிருந்து ஒரு பக்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு கேஸ¤க்காக வாராவாரம் வருவார்.

அவருடைய வக்கீலும் மயிலை நடுத் தெருவில் குடியிருந்ததால் வக்கீல் வீடு செல்லும் வழியில் ஸம்ஸ்க்ருத கல்லூரிக்குப் போய் நடமாடும் தெய்வத்தைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் அந்த அன்பர்.

ஆனால், ஒரு முறை அவசரமாக வக்கீல் வீட்டிற்குச் செல்ல வேண்டியிருந்ததால், மஹா பெரியவர் அவர்களின் முகாமைக் கடந்து செல்லும் போது, பக்தர் கண்ணீருடன், 'அவசரமாகச் செல்ல வேண்டியிருப்பதால் கருணைக் கடலைத் தரிசிக்க இயலவில்லையே' என வருந்தி, வக்கீல் வீட்டிற்குச் சென்றார்.

என்ன ஆச்சரியம்? - நடமாடும் தெய்வம் தன் திக்விஜயத்தில் அன்று நடுத்தெரு சென்று, வக்கீல் வீட்டு வாயிலில் பூர்ண கும்ப மரியாதையை ஏற்றுக் கொண்டு அருள்பாலித்துக் கொன்டிருந்ததுதான்!

இதுதான் காஞ்சி மாமுனியின் கருணை.

2 comments:

Vijay said...

தூய்மையான பக்தி உடையவனுக்கு அவன் இடத்திற்கே வந்து தெய்வம் அருள் வழங்கும் என்பதற்கு இன்னும் சாட்சீயம் தேவையா?

கீதா சாம்பசிவம் said...

mmmm பல முறை படிச்சாலும் இந்த நிகழ்ச்சியை நினைக்கும்போதெல்லாம் கண்ணீரே வருது. நன்றி.

முந்தைய பதிவுகள்

Followers