Monday, June 14, 2010

சாயிராம் - 1


"நான் இறந்து விட்டபோதிலும் என்னை நம்புங்கள். எனது சமாதியில் உள்ள எலும்புகள் உங்களுக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் அளிக்கும். நான் மட்டுமல்ல, என்னிடம் முழு இதயத்தோடு சரணமடைபவர்களுடன் எனது சமாதியும் பேசும். கூடச் செல்லும். தொடர்பு கொள்ளும். நான் உங்களிடத்து இல்லையென்பதாகக் கவலை கொள்ளாதீர்கள். எனது எலும்புகள் உங்களது நலத்தைக் குறித்துப் பேசி விவாதிப்பதைக் கேட்பீர்கள். அதனால் என்னையே எப்போதும் நினைவு கூருங்கள். உள்ளம், உயிர் இவற்றால் என்னை நம்புங்கள். அப்போதுதான் நீங்கள் மிகுந்த பலனை அடைவீர்கள்" என்றார் பாபா.

-
ஸ்ரீ ஸாயி ஸத் சரித்திரம், அத்தியாயம் 25, பக்கம் 206

No comments:

முந்தைய பதிவுகள்

Followers