Friday, February 12, 2010

கச்சி ஏகாம்பனே!

கச்சி ஏகாம்பனே!
காஞ்சியம்பதியில் வீற்றிருக்கும் சிவபெருமானே!

பிறக்கும் பொழுது கொடுவந்தது இல்லை
யாரும் இந்த உலகத்தில் பிறக்கும்போது செல்வத்தைத் தம்முடன் கொண்டு வருவது இல்லை!

பிறந்து மண்மேல் இறக்கும் பொழுது கொடுபோவது இல்லை
வறுமையாய்ப் பிறந்து பெரிதும் முயன்று ஈட்டிய செல்வத்தை இறக்கும் காலத்தில் தம்முடன் கொண்டு போவதில்லை!

இடைநடுவில் குறிக்குமிச் செல்வம்
பிறப்புக்கும் இறப்புக்கும் உரிய இடைக்காலத்தில் உண்டானதாக எண்ணப்படும் இந்த நிலையற்ற செல்வம்,

சிவன் தந்தது என்று கொடுக்க அறியாது
சிவபெருமான் தந்தது என்று உணர்ந்து இரப்பார்க்குக் கொடுக்க அறியாது

இறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன்?
வீணே உயிரை விடும் கீழ்மக்களுக்கு நான் என்ன சொல்லுவேன்?

பிறக்கும் பொழுது கொடுவந்தது இல்லை பிறந்து மண்மேல்
இறக்கும் பொழுது கொடுபோவது இல்லை இடைநடுவில்
குறிக்குமிச் செல்வம் சிவன்தந்தது என்று கொடுக்க அறியாது
இறக்கும் குலாமருக்கு என்சொல்லுவேன்கச்சி ஏகம்பனே.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers