சாப்பிடுவதற்கும் விதிகள் உண்டு. அவை யாவன:
ஒரு துணி மட்டும் அணிந்து சாப்பிடக்கூடாது.
சூரியன் மறையும் நேரத்தில் சாப்பிடக்கூடாது.
தண்ணீரில் கால் கழுவி, காலில் ஈரம் இருக்கும்போதே சாப்பிடவேண்டும். ஈரக்காலுடன் சாப்பிடுபவன் தீர்க்காயுளாக இருப்பான்.
கையைத் தரையில் ஊன்றிச் சாப்பிடக்கூடாது.
எள்ளு சம்பந்தப்பட்ட பதார்த்தங்களைக் கண்டிப்பாக இரவில் சாப்பிடக்கூடாது.
வயிற்றில் பாதிப் பங்கு சாப்பாடும், நீர் கால் பங்குமே நிரப்பி, கால் பங்கு வாயு சஞ்சரிப்பதற்கு விட வேண்டும்.
ஆயுளை விரும்புகிறவன் கிழக்கு முகமாகவும், கீர்த்தியை விரும்புகிறவன் தெற்கு முகமாகவும், சம்பத்தை விரும்புகிறவன் மேற்கு முகமாகவும், சத்தியத்தை விரும்புகிறவன் வடக்கு முகமாகவும் அமர்ந்து சாப்பிடவேண்டும்.
சாப்பிட்ட பிறகு குளிக்கக்கூடாது.
-மனு தர்ம சாஸ்திரம் (நன்றி: தினமலர்)
0 comments:
Post a Comment