Sunday, September 20, 2009

குருவின் முத்திரை

ஒரு குருவின் முத்திரை, அங்கீகாரம் சுகருக்குத் தேவை என்று தீர்மானித்து, சுகதேவரை ஜனகரிடம் அனுப்பினார் வியாச முனிவர்.

ஒரு நகரத்தின் ஆடம்பரத்தால் கிராமவாசிக்கு ஏற்பட வேண்டிய பிரமிப்பு சுகரிடம் தோன்றவில்லை. விசாலமான மாளிகையில் உப்பரிகையில், ராஜ அலங்காரத்துடன் இருந்த ஜனகரைத் தயக்கமின்றி நோக்கினார் சுகர். இருவருக்கும் நடந்த உரையாடலே ஒரு உபநிடதம் போல....

'குழந்தாய்! எதற்கு வந்தாய்?'
'ஞானம் பெற!'

'உன்னை அனுப்பியவர் யார்?'
'வியாச முனிவர்'

'வரும்போது கடைத்தெருவில் என்ன என்ன பார்த்தாய்?'
'சர்க்கரைப் பண்டங்கள்'

'வேறு ஏதும் பார்த்தாயா?'
'பேசிக்கொண்டே சுற்றி வரும் சர்க்கரை பொம்மைகள்'

'இன்னும் என்ன பார்த்தாய்?'
'இங்கே ஏறிவரும்போது, உறுதியான சர்க்கரை மெத்தைப் படிகள்'

'இங்கே என்ன நடக்கிறது?'
'ஒரு சர்க்கரை பொம்மை இன்னொரு சர்க்கரை பொம்மையுடன் உரையாடுகிறது!'

'நீ போகலாம்...உனக்கு எல்லா ஞானமும் வந்துவிட்டது...' என்றார் ஜனகர்.

ஞானியை ஞானியே அறிவான். ஞானத்தைத் தேடுபவர்கள், ஞானியைத் தேடுவதே முதல் வேலை.

கனவு மெய்ப்படும், சொல்வேந்தர் சுகி சிவம், கவிதா பப்ளிகேஷன்

2 comments:

Life Lessons from a Late Bloomer said...

awesome!! Sukhi Sivam is too good! Thanks for posting!

(Mis)Chief Editor said...

நன்றி! தங்கள் வருகைக்கும், பதிவுக்கும் நன்றி!

முந்தைய பதிவுகள்

Followers