Friday, September 25, 2009

அந்தரங்க ஆட்சியாளர்

"நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்வது அனைத்தும் எனக்குத் தெரியும்.

நானே அனைவருடைய அந்தரங்க ஆட்சியாளனாக இருதயத்தில் அமர்ந்திருக்கிறேன். இந்த உலகின்கண் அசையும், அசைவற்ற சர்வ ஜீவராசிகளையும் நான் அரவணைக்கிறேன். இப்பிரபஞ்சமெனும் தோற்றத்தை நானே கட்டுப்படுத்துபவன். ஆட்டுவிப்பவன்.
எல்லா வர்க்கங்களின் மூலமாதா நானே. முக்குணங்களின் கூட்டுறவும் நானே. நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன், படைப்பவன், காப்பவன், அழிப்பவனுமாம். என்பால் கவனத்தைத் திருப்புபவனை துன்பம் நெருங்காது. ஆனால் மாயை, என்னை மறந்தவனை ஆட்டி உலுக்கும்.

எல்லாப் பூச்சிகள், எறும்புகள், கண்ணுக்குத் தென்படுபவை, அசையக்கூடிய, அசைய முடியாத உலகம் எல்லாம் என்னுடைய உடம்பு அல்லது உருவம் ஆகும்."

-ஸாயி ஸத்சரித்திரம், அத்தியாயம் 3, பக்கம் 19

2 comments:

Life Lessons from a Late Bloomer said...

''Shirdi Sai Dwaraka Mai, Sarvantaryami sai Ram'' My favorite SaiBajan. Maybe you know this, but I am still sending you the link, which you could post it on your blog, so that others could be benefitted as well

http://www.youtube.com/watch?v=sEo4w4JNTIU&feature=PlayList&p=55581E77D4860222&playnext=1&playnext_from=PL&index=11

(Mis)Chief Editor said...

ஒவ்வொரு பதிவையும் படித்து, கருத்துக்களைப் பதிக்கும் தங்களுக்கு நன்றி!

தங்களுடைய 'அவா'வும் இறையருளால், குருவருளால் சீக்கிரம் நிறைவேறும்.

முந்தைய பதிவுகள்

Followers