Sunday, August 30, 2009

துக்கத்தில் பக்தி



நமக்கு ரொம்பத் துக்கமோ கஷ்டமோ வரச்சே அம்பாள் பேர்ல கோபம் வர்றது சகஜம். அம்பாள் நம்மைத் தண்டிச்சுக் கஷ்டம் குடுக்கற மாதிரி தோணினாலும், அவ மேல இருக்கற பக்தியை விட்டுடக்கூடாது. இன்னும் அதிகமா நம்பிக்கை வெக்கணும்.



சில சமயம் அம்மா குழந்தையைக் கோவிச்சுக்கறா. ரெண்டு அடிகூட வெக்கறா. அப்பக் குழந்தை நிஜமா துக்கப்படறது. 'ஓ'ன்னு அழறது. உடனே, எந்த அம்மா அடிச்சாளோ, அவகிட்டேயேதான் போறது. அடிச்ச கையையே பிடிச்சுக்கறது. அவ காலையே கட்டிண்டு அழறது..



அது மாதிரி அம்பாளுடைய குழந்தைகளான நாமும் துக்கம் வந்தா, அம்பாள்தான் அந்தக் கஷ்டத்தைக் குடுத்தான்னு நினைச்சா, 'எனக்கேம்மா இந்தத் தண்டனையைக் குடுத்தே. என்னால இந்தத் துக்கத்தைத் தாங்க முடியலையே. உன்னை விட்டா எனக்கு வேறே யார் இருக்கா?'ன்னு அவ பாதத்தையே பிடிச்சுண்டு அழணும். மறுபடியும் அவகிட்டயேதான் போயாணும். வேறே வழியே இல்லை.'



-மகா பெரியவர்

No comments:

முந்தைய பதிவுகள்

Followers