Saturday, August 08, 2009

உள்ளத்தைக் குளிப்பாட்டுங்கள்!

சென்ற ஞாயிற்றுக்கிழமை டி என் ஏ நாளிழதில் மஹான் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் எழுதியதைப் படித்தேன். அதிலிருந்து....
One does not bathe only if they are dirty. One does not sniff themselves to decide whether to take shower or not. We bathe everyday irrespective of how clean we are or how we smell. The same goes for clothes too. We wash them after one wear whether they are dirty or not. We don't wait till the clothes are covered in dirt to wash them.

Similarly, we need to regularly clean the mind of its impurities. The mind feels happiness and sadness every now and then. Sit down and meditate for a while, do pranayama, bhajans and prayer. Watch the mind, what happens? The mind gets washed and becomes clean once again.

இதே கருத்தை மஹா பெரியவர் முன்பே கூறிவிட்டார்! (தெய்வத்தின் குரல், ஏழாம் பகுதி, வானதி பதிப்பகம்)
உடம்பைச் சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படியென்றால் நன்றாகத் தேய்த்துக் குளிக்க வேண்டும். சோப்போ, சீயக்காயோ போட்டு உடம்பைத் தேய்த்து நன்றாக நீராடினால் உடம்பின் அழுக்குகள் போகின்றன. ஒரு நாள், ஒரு வேளை இப்படிக் குளித்து விட்டால் போதாது. மறுபடியும் மறுபடியும் அழுக்கு சேர்ந்து கொண்டே தான் இருக்கும். எனவே, தினந்தோறும் நீராட வேண்டும். பிரதி தினத்திலும் கூட காலை மாலை இரண்டு வேளைகளிலும் குளித்தால் மிகவும் நல்லது.

நீங்கள் போட்டுக் கொள்ளும் உடை அழுக்கு மயமாக இருந்தால் எத்தனை குளித்தும் பிரயோஜனம் இல்லை. துணியைத் துவைத்துப் பிழிவது உங்கள் தேகத்துக்கே ஓர் ஆரோக்கியப் பயிற்சியாக இருக்கும். உடம்பைத் தேய்த்துக் குளிப்பது, உடுப்பைத் துவைத்துக் கட்டுவது - இவை இரண்டாலும் அழுக்கிலிருந்து, சொறி சிரங்கிலிருந்து விடுபட வேண்டும்.

உடல், உடை இவற்றிற்கு மேலாக ஒன்று இருக்கிறது. அதுதான் உள்ளம், மனம் என்பது. மனச் சுத்தம், உள்ளத் தூய்மைதான் மிக மிக முக்கியம். அது இல்லாமல் உடம்பும், உடுப்பும் எவ்வளவு தூய்மையாக இருந்தாலும் பயனேயில்லை. மனசிலே அழுக்குப் படியாமல் அதை அவ்வப்போது தேய்த்துக் கழுவிக் குளிப்பாட்டிக் கொண்டே இருக்கவேண்டும்.

மனசுக்கு ஏற்படுகிற அழுக்கு என்பது என்ன? தப்பு, தவறு செய்வதுதான் உள்ளத்துக்கு அழுக்கு. நாம் கெட்ட நோக்கங்களுக்காகக் காரியம் செய்யவே கூடாது. நாமே எல்லாம் செய்து கொள்ள முடியும் என்று கர்வப்படாமல், பகவான் துணையால்தான் எதையும் சாதிக்க முடியும் என்று நாம் உணரவேண்டும். இதுவே அழுக்கைக் கழுவி விடும்.

பின்குறிப்பு:
முதலில் நான் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் கட்டுரையின் எளிமையை வியந்து கொண்டிருந்தேன். பின்னர், தெய்வத்தின் குரலில் சிறுவர்களுக்காக எழுதப்பட்ட 'உள்ளத்தைக் குளிப்பாட்டுங்கள்' பகுதியைப் படித்து விட்டு அசந்தே போய் விட்டேன்!

No comments:

முந்தைய பதிவுகள்

Followers