Sunday, December 04, 2005

நினைவொன்றே...

எனது நண்பர் திரு ஜயராமன் அவர்கள் எழுதிய கவிதை

சிவபெருமான் நினைவொன்றே வினை தீர்க்குமே!
அவர் தாரக மந்திரம் சுகம் தருமே!

விஷ வினையை கண்டத்தில் கொண்ட நீலகண்டனே!
விச்வத்தை காத்தருளும் விச்வநாதனே!
வில்வத்தில் பூஜிப்பேன் விச்வேஸ்வரனே!
எனக்கருள்வாயே உலகாளும் பரமேஸ்வரனே!

சிவபெருமான் நினைவொன்றே வினை தீர்க்குமே!
அவர் தாரக மந்திரம் சுகம் தருமே!

கோயிலுக்குக் கூட செல்ல முடியவில்லையே!
ஈஸ்வரா! உனைக் காண
வழி ஏதும் தெரியவில்லையே!
பாவம் தீர்க்க பணிவேனே உன் பாதத்திலே!
அருள் செய்ய இன்னும் நீ வரவில்லையே, அதனாலே

சிவபெருமான் நினைவொன்றே வினை தீர்க்குமே!
அவர் தாரக மந்திரம் சுகம் தருமே!


ஆனைமுகன் தந்தையாம் அருட்ஜோதியே!
செந்தில்நாதன் போதித்த மகேஸ்வரனே!
தன் பாதிதனைத் தந்த அர்த்தநாரியே!
முக்கண் கொண்ட கங்காதரனே!
கண்ணில் காட்சி தராததால், எனக்கு

சிவபெருமான் நினைவொன்றே வினை தீர்க்குமே!
அவர் தாரக மந்திரம் சுகம் தருமே!


No comments:

முந்தைய பதிவுகள்

Followers