Sunday, October 30, 2005

அணுதினமும்...

எனது நண்பர் திரு ஜயராமன் அவர்கள் எழுதிய கவிதையை ‘தீபாவளி வாழ்த்தா’கச் சமர்ப்பிக்கின்றேன்!

ஸ்ரீரங்கப் பெருமாளே!
வைகறைப் பொழுதினிலே,
ஞாயிறு வெளிச்சத்திலே,
உன் திருமேனி நிதமும்
நானும் தொழுவேனே!

வல்வினையாவும் போகும்
திங்களையத்த உனைத்
தினம் நான் தரிசித்தாலே!

உன்னழகுச் செவ்வாயாலே
உனை மறவாது நானிருக்க
வரமொன்று தருவாயோ?

பொற்புதன் கிடைத்தாலும்
நேரம் நன்றாயிருந்தாலும்
நின்னருள் இல்லாமல் போனால்
உனைத் துதித்தல் இயலுமோ?

சத்குரு வியாழவாசா!
உன் கடைக்கண் பார்வை போதும்;
அணுதினம் சுகம், மோக்ஷம் தருவாயே!

தற்குறி நானும் வெள்ளியில் செழித்திட
அயராது உனது நாமம் உரைப்பேனே!

சனியோடு பிணியும் நீங்கி,
வாழ்வோடு வளமும் பெற,
உலகினுக்கு அருள்வாயே!
ஸ்ரீரங்கப் பெருமாளே!

2 comments:

Arjuna_Speaks said...

Belated Diwali Wishes dear Pallikondan :)

Sridhar said...

அண்புல்ல தம்பி,

அணுதினமும் எண்பது பிழையள்ளவோ? அனுதினமும் எண்பது தாண் சரி.

முந்தைய பதிவுகள்

Followers