Monday, October 03, 2005

யோகி தத்தாத்ரேயர்

கர்நாடகத்தில் ராகவேந்திர சுவாமிகளுக்குப் பெரிய பக்தர் கூட்டம் இருப்பது போல, மஹாராஷ்டிரத்தில் தத்தாத்ரேயருக்கு ஏராளமான பக்தர்கள் உண்டு. மஹாராஷ்டிரத்தில் கோதவரி நதிக்கரையில் பிறந்த இந்த யோகி, வட இந்தியா முழுவதும் நிர்வாணமாகச் சுற்றியவர். அவதூத சந்நியாசப் பரம்பரையைச் சேர்ந்தவர்களால்தான் இது சாத்தியம். அவதூதர் என்றால் 'எல்லாவற்றையும் விட்டவர்' என்று பொருள்!

யோகி தத்தாத்ரேயர் காலையில் கங்கையில் குளிப்பார். மதியம் கோலாப்பூரில் சாப்பிடுவார். துங்க பத்திரையில் நீர் குடிப்பார். இரவு மாயாபுரியில் தூங்குவார். அவருக்கு எல்லாம் பரப்ப்ரும்மம்தான்; உலகமே பிரம்ம மயம்தான். அவரது தத்துவன் ' நினைத்ததைச் சொல்; சொன்னதைச் செய். இந்த உலகில் வாழும் ஒவ்வொரு நிமிடமும் இறைவனோடு கலக்க முயற்சி செய்ய வேண்டும். அந்த நிலையை நோக்கித்தான் நாம் போக வேண்டும். அதற்கு முக்கியமானது...ஆசையும், கோபமும், அகந்தையும் நம்மை விட்டு விலக வேண்டும்'. அதைத்தான் தொடர்ந்து போதித்தார்!

உதாரணமாக ஒன்று. நான் போகிறேன், நான் செய்கிறேன், நான் விரும்புகிறேன் என்று சொல்லிப் பாருங்கள். ஏன், ஏன் என்றுதான் முடியும். நாம் போகிறோம், நாம் செய்கிறோம் என்னும் போது ஓம்..ஓம் என்ற பிரணவம் ஒலிக்கும். என்ன அர்த்தம்? நான் எனும் அகந்தை இருக்கும் வரை இறைவன் உன்னை நெருங்கமாட்டான்!

No comments:

முந்தைய பதிவுகள்

Followers