Saturday, October 01, 2005

செய்யும் தொழிலே தெய்வம்

பகவான் ரமணர் ஒரு முறை திருவண்ணாமலையில் கிரி வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு வேலையாள் துடைப்பத்தினால் வழியைப் பெருக்கிக் கொண்டிருந்தான். ரமணரைப் பார்த்ததும் அவன் துடைப்பத்தை அப்படியே கீழே போட்டுவிட்டு, அவர் காலடியில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான்.

உடனே ரமணர் அவனிடம். 'ஏனப்பா வேலையை நிறுத்தி விட்டாய்? அது நடக்கட்டும்! அவரவர் கடமையைப் பொறுப்புடன் கவனமாகச் செய்வதே இறைவனை வணங்குவது போல் ஆகும்!' என்று கனிவாகக் கூறினார். அப்போது ரமணரின் பின்னால் வந்து கொண்டிருந்த பக்தர் 'அதெப்படி?' என்று கேட்டார். உடனே அதற்கு ரமணர், 'ஆம்! அவரவர் கடமையை வேறெந்த நினைவுமின்றி மனதை ஒழுங்குபடுத்திச் செய்வதே மிகவும் சிறந்த தெய்வத் தொண்டாகும்!' என்றார்.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers