Wednesday, October 05, 2005

மாத்ரு பஞ்சகம் 1

மஹா புண்ணியத்தால் சம்பாதிக்கப்பட்ட மனுஷ்ய ஜன்மா செய்ய வேண்டியதை வேதம் கூறும். "மாத்ரு தேவோ பவ" மாதா என்ற தெயவ்த்தை உபாசிக்கவனாக இரு என்று கூறியதற்கிணங்க ஸ்ரீ பகவத் பாதாள் தனது தாய் முக்தியடையும் நிலையில் இருப்பதைக் கண்டு மனம் நெகிழ்ந்து ப்ரம்ம ஞானியாகிய ஆதிசங்கரர் கூறியதே 'மாத்ரு பஞ்சகம்'.

ஆஸ்தாம் தாவதியம்ப்ரஸ¤தி ஸமயே துர்வார சூலவ்யதா
நைருச்யம் தனுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ
ஏகஸ்யாபி ந கர்ப்ப பாரபரண க்லேசஸ்ய யஸ்யாSக்ஷம:
தாதும் நிஷ்க்ருதி முன்னதோபி தனய: தஸ்யை ஜனன்யை நம:

தனது கீர்த்தி, தான் செய்த காரியம் எதுவானாலும் இருக்கட்டும்; எனது தாயார் என்னை கர்ப்பத்தில் வைத்து ஒவ்வொரு நிமிஷமும் என்னைத் தாங்கும் பொழுது அரும்பாடுபட்ட கஷ்டத்திற்கு நான் பதில் பிரதியுபகாரம் செய்திருக்கிறேனா?

பிரசவ சமயத்தில் போக்க முடியாததும், பொறுத்துக்கொள்ள முடியாததுமான சூலைவலி என்கிற கொடுமையான ஒரு வலிக்கு நான் பதில் உபகாரம் செய்திருக்கின்றேனா?

அதுவுமிருக்கட்டும்; என்னைப் பெற்றதும், என்னை ரக்ஷ¢க்க ருசியில்லாத பொருளைச் சாப்பிட்டு ஜீவித்த எனது தாய்க்கு ஏதாவது செய்திருக்கிறேனா?

தனது சரீரத்தை இளைக்கச் செய்வதும், தூக்கமில்லாமலும், எனது மலத்திலேயே படுத்து ஒரு வருஷம் என்னைக் காத்த தாயாருக்கு ஏதாவது செய்திருக்கிறேனா?

தன்னையே கஷ்டப்படுத்திக் கொண்டு பொறுமையுடன் காப்பாற்றிய குழந்தைகளில் எவனாவது தாயாருக்கு பிரதியுபகாரம் செய்ததுண்டா?

யாராலும் தாயாருக்கு பிரதியுபகாரம் செய்ய முடியாது. எனவே அம்மா, உனக்கு நமஸ்காரம் செய்கின்றேன், ஏற்றுக்கொள்.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers