Saturday, July 16, 2005

இறைவன்

பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்;
பிறந்து பாரென இறைவன் பணித்தான்.
இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்;
இறந்து பாரென இறைவன் பணித்தான்.
மனையாள் சுகம் யாதெனக் கேட்டேன்;
மணந்து பாரென இறைவன் பணித்தான்.
மழலை இன்பம் யாதெனக் கேட்டேன்;
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்.
'இறைவா!அனுபவித்தேதான் அறிவது
வாழ்க்கையெனில் நீ எதற்கு?' என்றேன்.
இறைவன் சற்றே அருகினிலில் வந்து
'அந்த அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

-கவியரசு கண்ணதாசன்

பி.கு. சொற்குற்றம் பொறுத்தருள்க!

2 comments:

Speech is Golden said...

Amazing!!! PK

Too good...

பள்ளி கொண்டான் said...

kannadasan.....u see:-)

முந்தைய பதிவுகள்

Followers