Friday, July 22, 2005

இந்து சமய தத்துவம் 5

காவிரியில் ஒருவன் நீராடுவது காவிரிக்கு நன்மை விளையும் பொருட்டன்று. தன் உடம்பிலுள்ள வெப்பம் தணியும் பொருட்டுக் காவிரியில் நீராடுகின்றான். அது போல் அருட்கடலாயிருக்கிற ஆண்டவனை வழிபட்டால் நம்முடைய பிறவி வெப்பம் தணிகிறது.
'ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நன்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் உந்தன்'
என்று மாணிக்க வாசக சுவாமிகள் திருவெம்பாவையில் அருளிச் செய்கின்றனர்.
-பி. எஸ். ஆச்சார்யா

No comments:

முந்தைய பதிவுகள்

Followers