Friday, July 29, 2005

கந்தரலங்காரம் 4

புந்திக் கிலேசமும், காயக் கிலேசமும் போக்குதற்கு
மனதின் துக்கங்களையும், உடம்பின் துக்கங்களையும்,அறவே அகற்றுதற் பொருட்டு,


மயில்வாகனனை
மயிலை வாகனமாக உடைய முருகப் பெருமானை,


சிந்திக்கிலேன்
நினைக்கின்றேனில்லை!


நின்று சேவிக்கிலேன்
அவருடைய சந்நிதியில் நின்று தரிசிக்கின்றேனில்லை,


தண்டைச் சிற்றடியை வந்திக்கிலேன்
தண்டையை அணிந்த சிறிய திருவடியை வணங்குகின்றேனில்லை,


ஒன்றும் வாழ்த்துகிலேன்
அவருடைய பெருமை பலவற்றுள் ஒன்றையாவது சொல்லி வாழ்த்துகின்றேனில்லை,


சந்திக்கிலேன்
அப் பரமதியைக் கூடுகின்றேனில்லை,


பொய்யை நிந்திக்கிலேன்
பொய்மையை இகழ்ந்து நீக்கினேனில்லை,


உண்மை சாதிக்கிலேன்
'மெய்ம்மை இதுவே!' என்று உலகமுணர நிலை நிறுத்தினே னில்லை.


சிந்திக்கி லேனின்று சேவிக்கி லேன்றண்டைச் சிற்றடியை
வந்திக்கி லேனொன்றும் வாழ்த்துகி லேன்மயில் வாகனனைச்
சந்திக்கி லேன்பொய்யை நிந்திக்கி லேனுண்மை சாதிக்கிலேன்
புந்திக் கிலேசமும் காயக் கிலேசமும் போக்குதற்கே.

-கந்தரலங்காரம், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

No comments:

முந்தைய பதிவுகள்

Followers