Monday, July 25, 2005

கந்தரலங்காரம் 3

குமர ஈசர் இருதாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும், சண்முகமும், தோளும், கடம்பும்
குமாரக் கடவுளுடைய இரண்டு திருவடிகளும், சிலம்புகளும், சதங்கையும், தண்டைகளும், று திருமுகங்களும், பன்னிரு தோள்களும், கடப்ப மலர் மாலையும்

எனக்கு முன்னே வந்து தோன்றிடின்
அடியேனுக்கு எதிரில் வந்தருளி, தோன்றுமானால்

நாள் என் செயும்
கொடிய திதி நட்சத்திரங்கூடிய நாள்கள் அடியேனை என்ன செய்யக்கூடும்?

வினைதான் என் செயும்
தீவினைதான் என்ன செய்யக்கூடும்?

எனை நாடிவந்த கோள் என் செயும்
அடியேனைத் துன்புறுத்துவதற்குத் தேடி வந்த நவக்கிரகங்கள் தான் என்ன செய்யக்கூடும்?

கொடும் கூற்று என் செயும்
கொடிய இயமனால்தான் என்ன செய்ய முடியும்?

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயும்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

-கந்தரலங்காரம், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

2 comments:

TJ said...

நாள், கிழமை, நக்ஷத்திரம், ராசி பலன், போன்றவற்றை மிகவும் கருத்தில் கொண்டு முடிவெடுக்கும் நண்பர்களுக்கு, நான் கூறும் உறை இது தான்.
அருமை. வாழ்த்துக்கள்.

Muthukumar Puranam said...

சம்பந்தர் பெருமான் சமணர்களை வெல்ல மதுரை பயணப்பட்ட போது அப்பர் பெருமான் தடுத்து நிறுத்தி அன்றைய நாள் அஷ்டமி திதியாக இருப்பதால் பிறிதொரு நாள் பயணத்தை
மேற்கொள்ள பிரார்தித்து கொண்டார். சம்பந்தர் உடனே "வேயுறு தோளி பங்கன்" என்ற பாசுரம் இயற்றி அப்பர் பெருமானுக்கு கோள்கள் அனைத்தும் "நல்ல நல்ல அடியார் அவர்க்கு
மிகவே" என்று உணர்த்தினார். உங்கள் பதிவை படித்த போது அந்த கதை ஞாபகம் வந்தது. நன்றி.

பு.பா. முத்துக்குமார்

முந்தைய பதிவுகள்

Followers