Monday, July 18, 2005

கந்தரலங்காரம் 2

விழிக்குத் துணை திரு மென் மலர்ப் பாதங்கள்
நமது கண்களுக்குத் துணையாவது, முருகப்பெருமானுடைய மேன்மை பொருந்தியதும் மென்மையானதும் தாமரை மலர் போன்றதுமாகிய திருவடிகளே

மெய்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்
உண்மையில் ஒரு சிறிதும் குறையாத சொல்லுக்குத் துணையாவது, முருகா என்று கூறும் அப்பரம பதியினுடைய திருநாமங்களே

முன்பு செய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்
நாம் முன்பிறப்பில் செய்த பழியைத் தருகின்ற பாவத்தை அகற்றுவதற்குத் துணையாவது, அத்திரு முருகேசனுடைய பன்னிரு புயங்களுமே

பயந்த தனி வழிக்குத் துணை செங்கோடன் வடிவேலும் மயூரமுமே
அஞ்சும் தன்மையுடைய 'தனிமையான வழி'க்குத் துணையாவது, திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள கந்தப் பெருமானுடைய, கூர்மை பொருந்திய வேலாயுதமும், மயிலுமேயாம்

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலும் செங்கோடன் மயூரமுமே.

-கந்தரலங்காரம், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

2 comments:

Speech is Golden said...

It is important to here mention that Seergazhi Govindarajan has done such a grand job of rendering Kandhar Alankaram that when you read this verse, Seergazhi's voice rings in your ears. Atleast it did for me.

பள்ளி கொண்டான் said...

thanks ma...

முந்தைய பதிவுகள்

Followers