Monday, July 18, 2005

இந்து சமய தத்துவம் 1

நரம்புள்ள பகுதிகள் சுளுக்கிக் கொள்ளும். நாவில் நரம்பு வைத்திருந்தால் ஒரு நாளைக்கு நூறு முறையாவது சுளுக்கிக் கொள்ளும். விளக்கெண்ணெய் தடவி உருவ வேண்டி வரும்.
இறைவன் கருணையினால் இடையறாது பேசுகின்ற நாவை நரம்பின்றி படைத்துக் கொடுத்தான். அவன் கொடுத்த நாவினால் அவனுடைய நாமங்களைச் சொல்லுதல் நன்றி பாராட்டுதலாகும்.
அவன் கொடுத்த தலையினால் அப் பரமபிதாவை வணங்குதல் நன்றிக் கடனாம். வடமொழியில் காலையும் மாலையும் கடவுளை வணங்குவதை, சந்தியா வந்தனம் என்பார்கள். சம் - செவ்வையாக, தியா - தியானித்து, வந்தனம் - வணங்குவது சந்தியா வந்தனமாகும்.
-பி. எஸ். ஆச்சார்யா

No comments:

முந்தைய பதிவுகள்

Followers