Tuesday, July 12, 2005

கந்தரலங்காரம் 1

அழித்துப் பிறக்கவொட்டா அயில்வேலன் கவியை அன்பால்
பிறவிப்பிணியை நீக்கும், கூர்மை பொருந்திய வேற்படையைத் தாங்கிய முருகப் பெருமானுடைய தோத்திரப் பாடலாகிய திருப்புகழை, இடையறாத மெய்யன்புடன்


எழுத்துப் பிழையறக் கற்கின்றிலீர்!
எழுத்துக்குற்றங்கள் சிறிதுமின்றி, கற்றுக் கொள்ளாமல் இருக்கின்றீர்களே,

எரி மூண்டது என்ன விழித்து, புகை எழ, பொங்கு, வெம்கூற்றன்
நெருப்பு மூண்டு எரிவது போல் கண்களை உருட்டிப் பார்த்து, புகை எழுமாறு, சீறுகின்ற கொடிய இயமன்

விடும் கயிற்றால் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றது?
வீசுகின்ற பாசக்கயிற்றினால், கழுத்திலே சுருக்கு போட்டு உயிரைப் பறிக்கின்ற அந்நாளிலோ தெய்வத் திருப்புகழைக் கற்கப் புகுவது?

அழித்துப் பிறக்கவொட் டாஅயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீரெரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங்கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே.

-கந்தரலங்காரம், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

3 comments:

Speech is Golden said...

Palli Kondane!

Kanthar Alankaaram arumai. porul athanai elithaaga vilangaatha arunagirinatharin kavikku, vilakkaurai besh besh! Kribanandha Vaariyarin speciality 'elimai' - unmai thaan.

Vasu said...

PK,

Romba azhagaga erunthathu. Vilakurai migavum arumai.

பள்ளி கொண்டான் said...

அன்புள்ள நண்பர்களுக்கு,

ராம் சொல்வது உண்மைதான்; வாரியார் சுவாமிகளால்தான் எதையும் எளிமையாகத் தரமுடியும்.

வாசு, மிக்க நன்றி.

ஏற்கெனவே பெரியவர்கள் எழுதி வைத்ததை, நான் படித்ததை, எனக்குப் பிடித்ததை உங்களுக்குத் தருகிறேன். இதில் 'பிரதி' எடுப்பது மட்டுமே என் வேலை. அவ்வளவே.

வாழ்க வளமுடன்,
பிகே

முந்தைய பதிவுகள்

Followers